அழுக்கு



வேலைக் களைப்பும்
 

வியர்வை நாற்றமும் 

கிள்ளும் பசியுமாய் 

காத்திருக்கின்றேன் 

பேரூந்துக்காய். 

வெயிலில் உருகும் 

ஐஸ் கிறீமாக 

கரைகின்றன 

மணித்துளிகள் 

தள்ளி எட்டி 

பார்க்கின்றேன் 

நீளும் வீதியில் 

முடிவிலியைக் காண்கின்றேன் 

பேரூந்தைக் காணவில்லை. 

அலுப்புடன் 

எதிர்வீதியில் 

திரும்பியது 

பார்வை. 

பொன் கேசமும் 

நீல விழிகளுமாய் 

வெப்பக் காங்கையில் 

சுகம் காண 

வருகின்றாள் 

ஒரு தேவதை. 

அழகுப் பதுமை 

நெருங்கியபோது 

தொலைந்தன விழிகள் 

தேடினேன்....... 

கண்டுகொண்டேன்! 

பிதுங்கிய அவளின் 

மார்புகளுக்குள் 

புதைந்து கிடந்தன 

என்னிரு விழிகள்! 

பேரூந்து வராமலேயே 

இருக்கட்டும்.

Comments

கவிதை நல்லா இருக்கு
Anonymous said…
//பிதுங்கிய அவளின்
மார்புகளுக்குள்
புதைந்து கிடந்தன
என்னிரு விழிகள்!//

பிதுங்கிய மார்புக்குள்
புதைந்து நிடந்த விழிகள்
மெல்ல நிமிரட்டும்.
பிதுங்கிய மார்பிற்கு
சொந்தக்காரி
உன் தங்கையாக இருக்கப்போகிறாள்.

விமர்சகி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

தெருவில் போகும் எல்லோருமே அக்கா தங்கைகள் என்று போலியாகக் கூறவிரும்பவில்லை.
விமர்சகி, விமர்சிகிறேன் என்று அபத்தமாய் பேசாதீர்.பெண்ணை விமர்சகி, விமர்சிகிறேன் என்று அபத்தமாய் பேசாதீர்.பெண்ணை உடலமாய் பார்ப்பது தவறு என்பதைத்தாண்டி அது அவர்களுக்கிழைக்கும் அநீதி என்றுதான் நானும் கருதுகிறேன்.அதற்காக எந்த பெண்ணையுமோ அல்லது மாற்று பாலினத்தின் மீதான அடிப்படை ஈர்ப்புக்கூட கூடாது என்கிற உங்கள் கருத்து நியாயமற்றது. அனானியாக வந்து கருத்தெழுதுவதை தயவுகூர்ந்து மாற்றிக்கொள்ளவும்
Anonymous said…
எழுதிக்கொள்வது: வன்னி மைந்தன்

அட..இது கூட ரெம்ப நல்லாய் இருக்கு...நன்றி..வன்னி மைந்தன்

22.3 19.11.2006
Anonymous said…
எழுதிக்கொள்வது: sanker

னல்ல பதிவு

1.27 21.1.2007

பிரசித்த பதிவுகள்