நாட்கள்




குளிர் காலங்களிலும் 

கடும் கோடைகளிலும்

உதிர்கின்றன நாட்கள். 

பிரசவிக்கும் காலைகளில் 

தூக்கக் கலக்கத்துடன் 

விழிகள் எதிர்பார்க்கும் தபாற்காரனை. 

கதவிடுக்கின்வழி விழுகின்ற 

பழுப்பு, வெள்ளை நிறக் 

கடிதங்களிடையே 

இடைக்கிடை சில 

வான் கடிதங்கள் 

எட்டிப் பார்க்கும்.

வாசிக்கும் அவசரத்தில் 

அலங்கோலமாகக் கிழியும் 

வான் கடிதம். 

கடித வரிகளில் கண் மேயும் 

மண் ஒழுங்கைகளில் மனம் பாயும். 

வாசித்த சில நிமிடங்களில் 

வழுக்கும் தார் வீதியில் 

கால்கள் பரபரக்கும் 

வேலையிடம் நோக்கி.

Comments

வாருங்கள் நண்பரே உங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி
நன்றி ஈழநாதன். உங்கள் பதிவுகள் பலவற்றைப் படித்துள்ளேன். எதிர்காலத்தில் அதிகம் எழுத முயற்சிக்கின்றேன்.
வணக்கம்...
வலைப்பதிவுத் தளத்தில் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆவலுடன்...
Anonymous said…
I am really attracted by the poems published here. I came to know about these through the TamilDaily Dinamalar. Thanks Dinamalar & Kiruban
Anonymous said…
poems are good.more poems are expected.good job kiruban.
Anonymous said…
Hi Kiruban,

For the first time I have entered your blog.It is really amazing to see the style and the way you put forward your stories. And I have gone through the articles about two old persons. Really good.

Sorry for what happened in the topic on "mannaar war". I didnt mean to go at you in that way.

Any way no hard feelings, catch you in the forum.

Bye !

Ragunathan.
sukan said…
உணர்வுகளோடு ஒன்றிப்போகும் நல்ல படைப்பு.

பிரசித்த பதிவுகள்