ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்!
எனது பிறந்தநாள் சம்மர் பாடசாலை விடுமுறைக் காலத்தில் வருகின்றது. நான் பிறந்தநாள் அன்று வேலைக்கு விடுப்பு எடுத்து ரிலாக்ஸாக ஓய்வில் இருப்பதை ஒரு கொள்கையாகவே வேலை செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்து விடாமல் வருடாவருடம் தொடர்வதால், பல மாதங்களுக்கு முன்னரே ஒருவார விடுமுறையை விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தேன். குளிர்காலம் எப்போதும் மப்பும் மழையும் காதுமடல்களை விறைக்கச் செய்யும் கடுங்குளிர்காற்றுமாக இருப்பதால், சம்மரில் பிரகாசிக்கும் வெயிலில் எங்காவது செல்ல மனம் ஏங்கும். பாடசாலை விடுமுறையில் வீட்டில் நிற்கும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிக்க எனது இணையும் இதே வாரத்தில் விடுமுறை எடுத்திருந்தார். விடுமுறையைக் கழிக்க எங்கே போவது என்பதில் ஒரு முடிவை எடுக்கமுடியவில்லை. Humans are explorers என்று சொன்னாலும் பிள்ளைகளுக்கு தெரியாத இடங்கள் எல்லாம் போய் பார்க்கவேண்டும் என்பதில் ஆர்வம் கிடையாது. வீட்டில் இருந்து பிளேஸ்ரேசனின் games விளையாடவும், cousins உடன் சேர்ந்து வெட்டியாகப் பொழுதைப் போக்கவும்தான் நாட்டம் அவர்களுக்கு. ஆனால் கனடாவுக்கு போவதென்றால் மட்டும் அங்கிருக்கும் cousins உடன் கும்மாளம் அடிக