நீ, நீர், நீங்கள்



  • நீங்கள் -- மிக மரியாதை
  • நீர் -- மரியாதை (கொடுக்க விரும்பாமல் கொடுப்பது)
  • நீ -- மரியாதையற்றது (தெரியாதவர்களுக்கு), சினேகபூர்வமானது (தெரிந்தர்வர்களுக்கு)

தமிழில் இருக்கும் நீ, நீர், நீங்கள் என்ற சுட்டுப்பெயர்களை நண்பர்களை நோக்குப் பாவிப்பதில் எப்போதும் ஒரு குழப்பம் எனக்கு இருக்கின்றது.

சில நண்பர்களை நீங்கள் என்றும் சிலரை நீ என்றும் சுட்டுவதுண்டுசிலரை நீங்கள் என்று ஆரம்பித்து நீ என்று மாற்றியதும் உண்டு. ஆனால் இந்நிலை மாற்றம் எப்படி ஏற்படுகின்றது என்பதில் தெளிவில்லை

மிக நெருக்கமான நண்பர்களைநீஎன்று அதிகம் அழைத்தாலும் சில நெருங்கிய நண்பர்களைநீங்கள்என்றுதான் ஆண்டாண்டு காலமாக சுட்டுகின்றேன்.

நீர்என்பது பேச்சு வழக்கு. ஒருமைக்கும் பொருந்தும், பன்மைக்கும் பொருந்தும் (பாவிக்கும்தன்மையைப் பொறுத்தது). ஆனால்நீர்என்பது மரியாதைக் குறைவு என்று நான் கருதுவதால் பாவிப்பதில்லை.

இலண்டனில் படிக்கும் காலத்தில் அறிமுகமானஜொனியன்நண்பன் ஒருவனை ஒரு மாத காலத்திற்குள்ளேயே நீ, வாடா, போடா என்று கதைத்துப் பழக ஆரம்பித்துவிட்டேன். ஆனால் எங்களுடன் படித்த எங்கள் ஊர்க்காரர்களைநீங்கள்என்றுதான் சொல்லிக் கதைப்பேன். ஒருநாள்ஜொனியன்நண்பன் இதைச் சுட்டிக்காட்டியபோது அதுக்கும் விளக்கம் கொடுக்கமுடியவில்லை. ஆங்கிலத்தில் இருக்கிறமாதிரி You ஒரு சொல்லாக இருந்திருந்தால் இப்படியான சிக்கல்கள் வராதுதானே.


Comments

பிரசித்த பதிவுகள்