Bachelor Party
கால்கள் வளைந்து நெளிந்தன 
விழ வேண்டும் பின்னர் 
எழ வேண்டும் என்றோர் 
உன்னுதல் 
விழுந்தால் எழுமாட்டாய் 
என்றோர் குரல் உள்ளிருந்து. 
ஓ! இன்னும் அமிழவில்லை. 
இசையின் இரைச்சல் காதுகளில் 
சிந்திய உணவுத் துணுக்குகள் கால்களில் 
நீந்தினேன் நடன முன்றலை நோக்கி. 
எண்ணெய்ப் படலமூடே 
சொடுக்கும் கைகளும் 
துள்ளிடும் கால்களும். 
மேலெழுந்து கீழிறங்கும் 
இடைகளின் நடுவே நான். 
நிலை கொள்ளமுடியவில்லை 
இரப்பர் போல் ஈய்ந்தேன். 
சமனம் கொள்ள விரிந்து 
வளைந்தன கைகள். 
நெளிந்து வளைந்து 
எவர்மேலேயோ சாய்ந்தேன். 
வியர்வைப் பிசுக்குடன் 
இளஞ்சூடான மேனியின் 
கதகதப்பு தூண்டியது 
உணர்வுகளை. 
துவண்ட தலையை நிமிர்த்தி 
குவித்தேன் கண்களை. 
சிலந்தி வலைப் பார்வையில் 
தெரிந்தாள் துணியின்றி 
துகிலுரி நங்கை. 
துவண்டது தலை 
மீண்டும்!


Comments
கனவுகானும் வாழ்க்னக என்று உண்னமயாகும்
அன்னாலுக்காய் காத்திருக்கும் ஒருயிவன் நான்
15.6 27.12.2006
[கொஞ்சம் அட்ரஸ் கெடக்குமா? உங்க அட்ரஸ் இல்ல...]